என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பத்ம விருதுகள்"
- தனித்தன்மைக் கொண்ட விளையாட்டில் சாதனை புரிந்த நபர்கள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க வருகிற 28-ந்தேதி கடைசி நாாகும்.
சென்னை:
2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட கலெக்டர் அனுசுயாதேவி (பொறுப்பு) அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2024-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வரும் ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினவிழாவில் வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளர்களை அங்கீகரிக்க கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல்,பொறியியல், மத்திய அரசுப்பணி, வியாபாரம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது. சென்னை மாவட்டத்தைச் சார்ந்த கீழ்க்காணும் தகுதிகள் உடைய தனித்தன்மைக் கொண்ட விளையாட்டில் சாதனை புரிந்த நபர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.
பத்ம விருதிற்கு awards.gov.in, padmaawards.gov.in ஆகிய இணைய தள முகவரியில் வண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வருகிற 28-ந்தேதி கடைசி நாாகும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை அலுவலக நேரங்களில் 7401703480 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் குடியரசு தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டார்.
- பத்மபூஷண் விருதை பெற்று வந்த பிரேமலதாவை சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தொண்டர்கள் வரவேற்றனர்.
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா மே 9 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வென்றவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. விருது வழங்கும் விழாவில் விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் குடியரசு தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டார்.
விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதை பெற்று வந்த பிரேமலதாவை சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தொண்டர்கள் வரவேற்றனர்.
அதன்பின்பு விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதுடன் பிரேமலதா சாலை மார்க்கமாக கோயம்பேடு வரை வாகன பேரணி செல்ல முற்பட்டார். அவருக்கு பின்பாக தேமுதிக தொண்டர்களும் வாகன பேரணி செல்ல முயன்றனர். பிரேமலதா வாகனத்திற்கு மட்டும் தான் பேரணி செல்ல அனுமதி அளித்த காவல்துறையினர் தேமுதிகவினரின் வாகன பேரணிக்கு அனுமதி மறுத்தனர்.
காவல்துறையின் அனுமதியை மீறி பேரணியாக செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதனால் காவல்துறையினருக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து தேமுதிக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் சாலை மார்க்கமாக கோயம்பேடு வந்தடைந்த பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷண் விருதை வைத்து மரியாதை செலுத்தினார்.
- கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
- பிரேமலதா விஜயகாந்த் பத்ம விருதை பெற்றுக் கொண்டார்.
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த வகையில், இன்று (மே 9) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் குடியரசு தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டார். அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வகையில் நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வாழ்த்து செய்தயில், "என் நண்பன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியில் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கும், அவருக்கும் மிகவும் பிடித்தமான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பாடல் வரிகளை கூறி அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்," என்று தெரிவித்தார்.
இதே போன்று நடிகர் பிரபு வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "என் அன்பு சகோதரர் கேப்டனுக்கு விருது, என் இனிய நண்பர் கேப்டனுக்கு விருது. பத்ம பூஷன் விருதை கேப்டனுக்கு கொடுத்ததில் எங்க திரையுலகம் மிகவும் சந்தோஷம் அடைகிறோம். எங்களது அன்னை இல்லம் சார்பில் அவரது குடும்பத்தாருக்கும், லட்சக்கணக்கான புரட்சி கலைஞரோட விசிறிகளுக்கு எங்களோட மனமார்ந்த வாழ்த்துக்கள். கேப்டன் என்றைக்கும் எங்க மனுசல வாழ்ந்துட்டு இருக்காறு. கேப்டன் விஜயகாந்துக்கு இந்த விருதை அளித்த மத்திய அரசுக்கு மிகப்பெரிய நன்றி," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விருது வென்றவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
- பிரேமலதா விஜயகாந்த் குடியரசு தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டார்.
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வென்றவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று (மே 9) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் குடியரசு தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டார்.
- 2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
- பத்ம விருதுகளில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் மூன்று பிரிவுகள் உள்ளன
2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் சேவையாற்றியவர்களுக்கு வழங்கப்படும். பத்ம விருதுகளில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் மூன்று பிரிவுகள் உள்ளன.
இந்நிலையில், இன்று முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு, பத்ம விபூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியத்திற்கு பத்ம பூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
விளையிட்டு துறையில் சிறந்து விளங்கிய டென்னிஸ் விளையாட்டு வீரர் ரோஹன் போபண்ணாவிற்கு பதம்ஸ்ரீ விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
கலைத் துறையில் சிறந்து விளங்கிய பாடகி உஷா உதுப், நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம பூஷன் விருதை வழங்கினார்.
கலைத் துறையில் சிறந்து விளங்கிய நாட்டுப்புற நடனக் கலைஞர் நாராயணன் ஈபி, வங்கதேச பாடகி திருமதி ரெஸ்வானா சவுத்ரி பன்யா, பஜனை பாடகர் ஸ்ரீ கலுராம் பாமணியா ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.
மருத்துவத் துறையில் சிறந்து விளங்கிய தேஜஸ் மதுசூதன் படேல் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் சிறந்து விளங்கிய சீதாராம் ஜிண்டாலுக்கு பத்ம பூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
சமூக பணி துறையில் சிறந்து விளங்கிய பிந்தேஷ்வர் பதக்கிற்கு (மரணத்திற்கு பின்) பத்ம விபூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். இந்த விருதை அவரின் மனைவி அமோலா பதக் பெற்று கொண்டார்.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய பாரா நீச்சல் வீரர் சதேந்திர சிங் லோஹியாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.
அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறந்து விளங்கிய ராம் சேத் சவுத்ரிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.
மருத்துவத் துறையில் சிறந்து விளங்கிய மனோகர் கிருஷ்ணா டோலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.
- 5 பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷன், 110 பேருக்கு பத்மஸ்ரீ என 132 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் சேவையாற்றியவர்களுக்கு பத்ம விருதுநகள் வழங்கப்படும். பத்ம விருதுகளில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் என மூன்று பிரிவுகள் உள்ளன.
2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 5 பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷன், 110 பேருக்கு பத்மஸ்ரீ என 132 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பத்ம விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். பல்வேறு துறைகளில் அவர்களின் பங்களிப்பை இந்தியா மதிக்கிறது. அவர்கள் தங்கள் சிறப்பான பணிகளால் மக்களை ஊக்குவிக்கட்டும் என கூறியுள்ளார்.
Congratulations to all those who have been conferred the Padma Awards. India cherishes their contribution across diverse sectors. May they continue to inspire people with their exceptional work. https://t.co/rDJbL9nHNi
— Narendra Modi (@narendramodi) January 25, 2024
- வைஜெயந்திமாலா, சிரஞ்சீவு, வெங்கையா நாயுடு உள்ளிட்ட ஐந்து பேர் விபூஷன் விருது பெறுகிறார்கள்.
- விஜயகாந்த் உள்ளிட்ட 17 பேர் பத்ம பூஷன் விருது பெறுகிறார்கள்.
2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் சேவையாற்றியவர்களுக்கு வழங்கப்படும். பத்ம விருதுகளில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் மூன்று பிரிவுகள் உள்ளன.
இந்நிலையில் கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் 28-ம்தேதி விஜயகாந்த் காலாமானார்.
பத்ம விபூஷன் விருது பெறுபவர்களின் விவரம்:-
1. வைஜெயந்திமாலா- தமிழ்நாடு, 2. சிரஞ்சீவி- ஆந்திரப் பிரதேசம், 3. வெங்கையா நாயுடு - ஆந்திரப் பிரதேசம், 4. ஸ்ரீ பிந்தேஷ்வர் பதக் (மரணத்திற்குப்பின்) - பீகார், 5. பத்மா சுப்ரமணியம்- தமிழ்நாடு
பத்ம பூஷன் விருது:
6. விஜயகாந்த் (மரணத்திற்குப் பின்) - தமிழ்நாடு, 7. ஹோர்முஸ்ஜி- மகாராஷ்டிரா, 8. மிதுன் சக்ரவர்த்தி- மேற்கு வங்காளம், 9. சீதாராம் ஜிண்டால்- கர்நாடகா, 10. யங் லியு- தைவான், 11. அஷ்வின் பாலசந்த்- மகாராஷ்டிரா, 12. சத்யபிரதா முகர்ஜி (மரணத்திற்குப் பின்)- மேற்கு வங்காளம், 13. ராம் நாயக் - மகாராஷ்டிரா, 14. தேஜஸ் மதுசூதன் படேல்- குஜராத், 15. ஓலஞ்சேரி ராஜகோபால்- கேரளா, 16. ராஜ்தத்- மஹாராஷ்டிரா, 17. டோக்டன் ஆர்ஹூம்போ) மற்றவை - ஆன்மிகம் - லடாக், 18. பியாரேலால் சர்மா- மகாராஷ்டிரா, 19. சந்திரேஷ்வர் பிரசாத் தாக்கூர்- பீகார், 20. உஷா உதுப்- மேற்கு வங்காளம், 21. பாத்திமா பீவி (மரணத்திற்குப் பின்)- கேரளா, 22. குந்தன் வியாஸ் - மகாராஷ்டிரா
- இந்திய வரலாறு மற்றும் சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைத்தவர்.
- கும்மி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், பெண்களுக்கு சிறப்பான பயிற்சி.
2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த பத்திரப்பன் என்பவருக்கு கலைப்பிரிவில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்த வள்ளி ஒயில் கும்மியாட்ட நாட்டுப்புற கலைஞர் பத்ரப்பன் என்பவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
87 வயதான பத்ரப்பன் தனது நடனம் மூலம் இந்திய வரலாறு மற்றும் சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைத்தவர்.
கும்மி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், பெண்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்ததற்காகவும் கவுரவிக்கப்படுகிறார்.
இதில், பத்ரப்பன் உள்பட 34 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2023-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
- பத்ம விருதுகள் 106 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம விருது . இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் பல்துறை சார்ந்த ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான பத்ம விருது குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது. பத்ம விருது வென்றவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையனுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.
- சமூக நீதிக்காக போராடிய எனது நண்பர் மறைந்த முலாயம் சிங் உள்ளிட்ட 106 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- தமிழ்நாட்டில் இருந்து 5 பேர் இந்த விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
சமூக நீதிக்காக போராடிய எனது நண்பர் மறைந்த முலாயம் சிங் உள்ளிட்ட 106 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இருந்து 5 பேர் இந்த விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பத்மபூஷன் விருது பெற்ற பாடகி வாணி ஜெயராம், பத்மஸ்ரீ விருது பெற்ற சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம், பாம்புபிடி கலைஞர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன், மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமி, நடனக்கலைஞர் கல்யாணசுந்தரம் பிள்ளை ஆகியோர் மேலும் பல விருதுகளை வெல்ல வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
- ஓஆர்எஸ் கரைசலை கண்டுபிடித்த மருத்துவர் திலீப் மஹாலனாபிஸ்-க்கு பத்ம விபூஷன் விருது
புதுடெல்லி:
கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம் மற்றும் சமூகப் பணி போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று விருதுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு கடந்த மே 1 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை முடிவடைந்த நிலையில், 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை இன்று மத்திய அரசு இன்று அறிவித்தது.
தமிழகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களும் சமூக ஆர்வலர்களுமான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இருளர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் பாம்பு பிடிப்பது குறித்து உலக அளவில் பயிற்சி அளித்து வருகின்றனர்.
மருத்துவத்துறையில் சிறப்பாக சேவையாற்றியதை கவுரவிக்கும் வகையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மருத்துவர் திலீப் மஹாலனாபிஸ்-க்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இறப்புக்கு பிந்தைய பத்ம விருதாக இது வழங்கப்படுகிறது. ஓஆர்எஸ் கரைசலை கண்டுபிடித்த இவர், உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1971-ம் ஆண்டு வங்காளதேசத்தில் நடைபெற்ற விடுதலைப் போரின்போது, அகதிகள் முகாமில் இவர் பணியாற்றி வந்தார். அப்பகுதியில் வேகமாகக் காலரா பரவி மக்களை அச்சுறுத்தி வந்தது. அந்நேரம், டாக்டர் திலீப், ஓ.ஆர்.எஸ். கரைசலை கொடுத்து ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்